Friday, August 11, 2017

"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம்

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். "மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்" என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால்? அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்? எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது! தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், "துளிர்" என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும்! சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள்? பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் "துளிர்" இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

துளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

முகவரி:

துளிர் நிர்வாக அலுவலகம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை 600 086

தொலைப்பேசி எண்: 044 28113630

மின்னஞ்சல் முகவரி: thulirmagazine@gmail.com

சந்தா விவரங்கள்:
ஒரு இதழ்: ரூ. 10/-
ஆண்டுச் சந்தா: ரூ. 100/-
ஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20
ஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-

7 comments:

  1. மிக்க நன்றி
    - ஹரீஷ், இணை ஆசிரியர், துளிர்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. PDF அனுப்ப இயலுமா?
    editor@tamilnenjam.com

    ReplyDelete
  4. Can i send the amount by Online payment

    ReplyDelete
  5. Can i send the amount by Online payment

    ReplyDelete
  6. ஹரீஷ் ஐயாவுக்கு நன்றி. தங்கள் சேவை இனிதே தொடரட்டும்.

    தமிழ் நெஞ்சம் ஆசிரியருக்கு நன்றி. இது PDF கோப்பாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை.

    பூபதி அவர்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அவர்கள் வங்கிக்கணக்கு குறித்த விவரங்களைத் தருவார்கள். அல்லது நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மணிஆடார் செய்யலாம்.

    ReplyDelete
  7. துளிர்
    பல புதிய அறிவியல் தகவல்கள் தந்து பலவற்றை விளக்கும் இதழ்.சமூகத்திற்கான நல்ல தகவல்களை பரிமாற விரும்புவர்கள் அவசியம் படிக்க வேண்டிய இதழ்.

    ReplyDelete