1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!
ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள்பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.
வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.
2. தமிழ்வழிக் கல்வி
இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.
குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.
3. சமூக வலைத்தளங்களில் தமிழ்
இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.
இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!
4. மொழிபெயருங்கள்
விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!
5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல்
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!
ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள்
வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.
2. தமிழ்வழிக் கல்வி
இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.
3. சமூக வலைத்தளங்களில் தமிழ்
இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.
தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள் |
இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!
4. மொழிபெயருங்கள்
விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!
5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல்
எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா? (நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!) |
13 comments:
மீண்டும் ஒரு அருமையான கட்டுரை. இந்த காலத்துக்கு மிக தேவையானதும் கூட. but parichayam enbathum sanskrit vaarthai thaan. arimugam thaan tamizh vaarthai'nu nenaikuren. Also ulleedu'na input? valaipookkal'na enna?
And I would like to help in translating things. Especially engineering related things. I am still learning tamil(and engg:)),but I am interested in involving in these things. Translation is a very under-rated artform/literary form.
Neenga sonna mathiri word-to-word direct translation-a irukkakoodaadhu. andha eng vaarthai alladhu visayathoda porula naama muzhusa purinjikitu, ulvaangitu athuku apram tamizh-la atha mozhipeyarkanum.
I would like to share a small trivia with you. Some words are being used by telugu and tamil speakers for things which are different yet similar. eduthukaattukal:
1.சாறு means juice in tamil but telugu people call rasam as tomato சாறு. We call juice as rasam. :)
2. சளி is used for nose related cold in tamil but telugu people use it for cold weather. winter is சளி காலம்.
3. வாடகை means rent in tamil. In telugu vaaduka means 'use'(noun)(payanpaattu)
//but parichayam enbathum sanskrit vaarthai thaan. arimugam thaan tamizh vaarthai'nu nenaikuren. Also ulleedu'na input? valaipookkal'na enna? //
தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வலைப்பூ - Blog
தெலுங்கு ஒரு திராவிட மொழி. அதில் தமிழ் சொற்கள் இருப்பது வியப்பல்ல! தற்காலத் தமிழில் இருந்து தெலுங்கு தோன்றியது என்று நான் சொல்லவில்லை. திராவிட மூல மொழியில் இருந்து பிரிந்தவையே எர்னாடும் என்று நம்புகிறேன்.
thanks sir. mudhal padiya "statistical inference" enbatharku oru tamizh vaarthai uruvaakkuvoma? google translate padi statistics na புள்ளிவிவரங்கள், inference na அனுமானம். but அனுமானம் sanskrit vaarthai. hindi'liyum inference'kku ithe vaarthai thaan. so naama oru thooya tamizh allathu dravida sol-la uruvaakkanum.
I appreciate your enthusiasm. We already have words for the same. statistic -> புள்ளியியல் and inference -> உய்த்தறிதல்
விவரங்கள், I guess it has non-Dravidian origin.
thqanks sir. so statistical inference is புள்ளியிய உய்த்தறிதல்?
by the way are you on twitter?
Correct. I am not in Twitter.
You can call me David. Don't use sir... :)
ok david. adutha vaarthai 'entropy'. entropy is a measure of uncertainty in a system. uncertainty is உறுதியின்மை I guess, since certain is உறுதி.
சிதறம். Please check Wikipedia Tamil or Tamil Nadu government text book (Tamil medium). They have already did a lot of work for the language.
saw the wiki tamil page. their work is amazing. has got native tamil words for convex funtion, concave function, linear algebra and all.
also can you suggest how to type tamil easily in linux, android etc? i mean any app.
also waiting for your next post :-)
You can see in this blog itself I have suggested one Android Tamil Keyboard app. It is an opensource app and I have developed the keyboard extension back in 2011 (when almost all Android phones lacked Tamil keyboard). But to be honest, if I am to use and Android now, I will go with the default Tamil keyboard. Most phones sold in India come with Indian languages out of the box. I think Google keyboard has options to include multiple languages, dictionaries etc. If your phone doesn't support it, then look in to the app I have mentioned.
In GNU/Linux, you can install various keyboards. Just do a google search. If you don't know Tamil typing, then you can use onscreen keyboard. Azhagi software provides transliteration and I think it is available for GNU/Linux. If you have internet connection, you can make use of various online transliteration tools like Google, Yahoo etc.
http://techmusicnmore.blogspot.in/2014/03/blog-post.html
http://techmusicnmore.blogspot.in/2014/02/tamil-keyboard-for-android.html
thanks a lot
Post a Comment