|
வாசிக்கும் சிறுமி, ஃபிரிட்ச் வோன் யுதே [நன்றி: விக்கிமீடியா] |
நூல்கள் வாசிக்கும் பழக்கம் நாளுக்குநாள் குறைவதும், தொலைகாட்சி மற்றும் கைபேசிகள் நம் ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை வீணடிப்பதும் இன்று நாம் அனைவரும் அறிந்த உண்மை. "கொஞ்சம் படிங்க பாஸ்!" என்னும் இந்த புதிய பகுதி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சில எளிய மற்றும் சுவாரசியமான நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, மலிவான, தரமான, சுவையான மற்றும் அறிவை வளர்க்கக்கூடிய புத்தகங்களை அறிமுகப் படுத்துவதே இந்தப் பகுதியின் நோக்கம்.
அனைத்து வயதினருக்கும் பொருந்துமென்றலும், இது குறிப்பாக இளம் வயதினரை மனதில் வைத்து எழுதப்படும் பகுதியாகும். இதில் ஏதாவது மாற்றங்கள், மேம்படுத்துதல்கள், குறை நிறைகள் இருக்குமாயின், எனக்குத் தெரிவிக்கவும். தொடர்ந்து வரும் பதிவுகளில் அவை சரிசெய்யப்படும்.
"
கொஞ்சம் படிங்க பாஸ்" என்னும் தேடு சொல் (label) மூலமாக இந்த வரிசையில் வரும் பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். நூல்களை வாசித்து, அறிவைப் பெருக்கி, வளமான எதிர்காலத்தை வசமாக்குவோம்!
No comments:
Post a Comment